Home /News /tamil-nadu /

'தமிழக விவசாயிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பட்ஜெட்' : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

'தமிழக விவசாயிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பட்ஜெட்' : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்கள் அறிவிக்கப்படும். - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்கள் அறிவிக்கப்படும். - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்கள் அறிவிக்கப்படும். - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

    தமிழக விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து அமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிவிப்பு-

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட், விவசாய தொழிலை உச்சத்திற்கு கொண்டு செல்லும். கடந்த பட்ஜெட்டில் மொத்தம் 86 அறிவிப்புகளை வெளியிட்டோம். அவற்றில், 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    இதையும் படிங்க - தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022 : சட்டமன்றத்திற்கு பாரம்பரிய நெல் விதையுடன் வந்த திமுக எம்எல்ஏக்கள்

    சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்கள் அறிவிக்கப்படும். வேளாண் பட்ஜெட் தமிழக விவசாயிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும், கால நிலை மாற்றங்கள் விவசாயத்திற்கு சவாலாக உள்ளன. இதனைத் தாங்கி விளையக் கூடிய பயிர் வகைகளை விவசாயிகள் பயிரிட வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க - வேளாண் பட்ஜெட் 2022 - 2023 முக்கியம்சங்கள்

    தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
    Published by:Musthak
    First published:

    Tags: TN Budget 2022

    அடுத்த செய்தி