Home /News /tamil-nadu /

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி ஒதுக்கீடு... பட்ஜெட்டில் அறிவிப்பு

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி ஒதுக்கீடு... பட்ஜெட்டில் அறிவிப்பு

அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கரில் உற்பத்தி செய்யப்பட்ட 20 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.

அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கரில் உற்பத்தி செய்யப்பட்ட 20 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.

அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கரில் உற்பத்தி செய்யப்பட்ட 20 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்.

    இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    2022 - 23-ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்து, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு-

    ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம் போன்ற மதிப்புமிக்க மரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும். வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ. 1லட்சம் கடனுதவி வழங்கப்படும்.

    60ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும். தென்னை விவசாயத்திற்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க - 'தமிழக விவசாயிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பட்ஜெட்' : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

    விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலைமைச்செயலர் தலைமையில் குழு அமைத்து பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.

    புவி வெப்பம் அதிகரிப்பால், உணவக மேலாண்மை பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திற்கு ரூ.75லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க - தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2022 : சட்டமன்றத்திற்கு பாரம்பரிய நெல் விதையுடன் வந்த திமுக எம்எல்ஏக்கள்

    அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கரில் உற்பத்தி செய்யப்பட்ட 20 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கப்படும். பருத்தி உற்பத்தியை உயர்த்திட ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தனது பட்ஜெட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: TN Budget 2022

    அடுத்த செய்தி