Home /News /tamil-nadu /

விவசாய கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க புதிய திட்டம்... வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாய கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க புதிய திட்டம்... வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக மின்னணு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை - பட்ஜெட்டில் அறிவிப்பு

விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக மின்னணு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை - பட்ஜெட்டில் அறிவிப்பு

விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக மின்னணு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை - பட்ஜெட்டில் அறிவிப்பு

    விவசாய கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்து, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு-

    ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்கள் நவீனமயமாக்கப்படும். வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

    இதையும் படிங்க - ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்படுகிறதா?

    தஞ்சை,சேலம்,திருவள்ளூர் நெல்லை ஆகிய மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை.விவசாய கூலித் தொழிலாளர்களை வட்ட, மாவட்ட அளவில் ஒருங்கிணைக்க புதிய திட்டம் தொடங்கப்படும். 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடாக 2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, விருதுநகர் தென்காசி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு பயிரிடலை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க - பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? நிதி அமைச்சர் பிடிஆர் விளக்கம்

    உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை, விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக மின்னணு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தமிழ்மண் வளம் என்ற புதிய இணைதளம் உருவாக்கப்படும். 75 லட்சம் மதிப்பீட்டில் மயிலாசுதுறையில் புதிய மண் பரிசோதனை கூடம் அமைக்கப்படும். சோயா பீன்ஸ் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் திட்டம் செயல்படுத்தப்படும். என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: TN Budget 2022

    அடுத்த செய்தி