• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரேசனில் கருப்பட்டி-வேளாண் பட்ஜெட்டில் பனைத் தொழிலுக்கு முக்கியத்துவம்!

ரேசனில் கருப்பட்டி-வேளாண் பட்ஜெட்டில் பனைத் தொழிலுக்கு முக்கியத்துவம்!

பனை

பனை

பனை வெல்லத்தை பனை வாரியம் மற்றும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் ஒருங்கிணைந்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

  • Share this:
    தமிழக அரசு தாக்கல் செய்துள்ள முதல் வேளாண் பட்ஜெட்டில்  பனைத் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் விவசாய நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.  இதில், பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனங்கன்றுகளை முழு மானியத்தில் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதேபோல், பனை வெல்லத்தை பனை வாரியம் மற்றும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் ஒருங்கிணைந்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிறுதானிய உணவுகளின் உற்பத்தியை அதிகரிக்க சிறுதானிய இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு


    இதுபோக, வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கு என்று தனி பிரிவு உருவாக்கப்படும் என்றும்  மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு33 கோடியே 3 லட்சம் ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    தென்னை விவசாயத்திற்காக சீர்மிகு தென்னை சாகுபடிஎன்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.  தென்னையில் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.  ‘தேரோட தென்னை’ என்ற அடிப்படையில் தென்னந் தோப்புகளில் அதிக இடைவேளி உள்ளது.  மரங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை திறம்பட பயன்படுத்த பல்லடுக்கு சாகுபடி விவசாய முறை மூலம் தீவனப்புல் உட்பட பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுவதற்கு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: கைப்பதிப்புப் மூலம் தேசியக் கொடி: 5ம் வகுப்பு மாணவன் சாதனை


    இதேபோல், தென்னை சாகுபடி பரப்பினை அதிகரிப்பதற்காக 17  இலட்சம் தரமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: