ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகம் முழுவதும் 50 ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகள் மாற்றம்.. உள்துறை செயலர், மருத்துவத் துறை உட்பட முக்கிய பொறுப்பு வகித்த அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 50 ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகள் மாற்றம்.. உள்துறை செயலர், மருத்துவத் துறை உட்பட முக்கிய பொறுப்பு வகித்த அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக அரசு தலைமைச் செயலகம்

தமிழக அரசு தலைமைச் செயலகம்

IAS officers transfer:  மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சிறப்புப் பணியில் இருந்த முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ்நாடு முழுவதும் 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலாளர், மருத்துவத் துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்பு வகித்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  புதிய நியமனங்கள் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு  வெளியிட்ட உத்தரவில், வணிகவரித்துறை ஆணையர் பணீந்தர ரெட்டி, உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பதவியை வகித்து வரும் எஸ்.கே. பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

  சிறப்புப் பணியில் இருந்த முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு மேலாண்இயக்குனரான கூடுதல் தலைமை செயலாளர் சாய்குமார், காகிதத்தாள் நிறுவன தலைவராக மாற்றப்பட்டு உள்ளார். நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார், வணிகவரி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.  சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர், பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்,

  மேலும் படிங்க: Headlines Today : “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் - தலைப்புச் செய்திகள் (ஜூன் 13, 2022)

  தொழிலாளர் நலத்துறை செயலாளராக இருந்த கிர்லோஷ் குமார், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியரான திவ்யதர்ஷினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக உள்ள ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு, கூடுதலாக தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனர் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளரான ஆனந்தகுமார், மாற்றுதிறனாளிகள் நலத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தொழில் துறை சிறப்பு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், டிட்கோ நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  இதையும் படிங்க: அனைத்து சாலைகளும் சென்னையை நோக்கி... விடுமுறை முடிந்து திரும்பியவர்களால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

  வருவாய் நிர்வாக ஆணையரான சித்திக், சென்னை மெட்ரோ ரயில் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் நல ஆணையரான மதிவாணன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார்.  திருச்சி மாவட்ட ஆட்சியரான சிவராசுக்கு, வணிகவரித்துறையின் இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன தலைவராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ், தொழில்துறை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார். பட்டுவளர்ப்பு ஆணைய இயக்குனரான சாந்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Chief Secretary, IAS Transfer, Iraianbu IAS