11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க நீதிபதிகள் ஏ.எஸ்.பாப்டே மற்றும் பிஆர். கவாய் அடங்கிய அமர்வையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: July 3, 2019, 7:50 AM IST
  • Share this:
ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறின. அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்தது, சசிகலா சிறைக்குச் சென்றது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றது, என அடுத்தடுத்த திருப்பங்களால் தமிழக அரசயலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

பதவி விலக தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியதால் ஓ.பி.எஸ் அணி இ.பி.எஸ் அணி என 2 அணிகள் ஆனது அதிமுக. இந்நிலையில் முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி தனது அரசு மீதான நம்பிக்கையை நிரூபிக்கும் நிர்பந்தம் ஏற்பட்ட போது, 201-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடைபெற்றது.


துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்


அந்த வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், நட்ராஜ், ஆறுக்குட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், சரவணன், மாணிக்கம் மற்றும் மனோகரன் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த 11 பேரும் அதிமுக கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்தனர். ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர். இதையடுத்து அந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி


இதையடுத்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஓய்வு பெற்றதால் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது. இதனால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என திமுக சார்பிலும், அண்மையில் திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

Thanga tamil selvan, தங்க தமிழ்செல்வன்
தங்க தமிழ்செல்வன்


இதை ஏற்ற உச்சநீதிமன்றம் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் வழக்கை விசாரிக்க நீதிபதிகள் ஏ.எஸ்.பாப்டே மற்றும் பிஆர். கவாய் அடங்கிய அமர்வையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

மேலும் படிக்க... நஷ்டம் ஏற்படுத்துகிறதா விஜய் படங்கள்?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading