நாட்டின், ஒற்றுமை ஒருமைப்பாடு காக்க முக்கியத்துவம் அளிக்கும் கூட்டணியாக அ.தி.மு.க கூட்டணி இருக்கிறது. மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம்.
மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் தங்கள் கட்சிக்குரிய சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸும் இணைந்து போட்டியிடுகிறது. இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், ‘எங்களை வேண்டாத, விரும்பாத, எங்கள் மக்கள் பணிக்கு அங்கீகாரம் தராத, எங்கள் வளர்ச்சியைத் தடுக்கும் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளோடு எங்களுக்கு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாட்டின், ஒற்றுமை ஒருமைப்பாடு காக்க முக்கியத்துவம் அளிக்கும் கூட்டணியாக அ.தி.மு.க கூட்டணி இருக்கிறது. மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம்.
சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சி, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கூட்டணியாக இந்தக் கூட்டணி செயல்படும்.
அ.தி.மு.க தலைமை, மக்கள் விரும்பக் கூடிய வெற்றிக் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணியை தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஜீரணிக்க முடியாமல் தடுமாறிவருகிறது.
அதனால், தான் இந்தக் கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறது. தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை, லட்சியம் என்பது வேறு.
இந்தக் கூட்டணி, பாராளுமன்றத் தேர்தல் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல் வரை சிறந்த வெற்றி பெறும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, காங்கிரஸில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் விலகிவிட்டது.
பா.ஜ.கவின் நான்கு ஆண்டு கால ஆட்சி, குறைகளை நிறைகளாக்க கூடிய ஆட்சியாக இருந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ், தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனிச் சின்னத்தில் போட்டியிடும். அ.தி.மு.கவில் தஞ்சாவூர் தொகுதியைக் கேட்டோம். அந்தத் தொகுதியையே ஒதுக்கியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.
Also see:
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.