HOME»NEWS»TAMIL-NADU»tmc senior leader bs gnanadesikan passed away scs

தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானதேசிகன் இன்று மதியம் காலமானார்.

தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்
ஞானதேசிகன்
  • Share this:

தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஞானதேசிகன் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி நெஞ்சுவலி காரணமாக கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டதால், கவலைக்கிடமான நிலைக்கு ஆளானார். அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல் நலம் தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.



இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மீண்டும் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பலனின்றி ஞானதேசிகனின் உயிர் இன்று மதியம் 2.20 மணிக்கு பிரிந்தது. ஏானதேசிகன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: