தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகனுக்கு மீண்டும் நெஞ்சுவலி : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகனுக்கு மீண்டும் நெஞ்சுவலி : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஞானதேசிகன்

இன்று காலை த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஞானதேசிகன் உடல் நலம் குறித்து குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

 • Share this:
  தமிழ் மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஞானதேசிகனுக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஞானதேசிகன். அவருக்கு வயது 71. கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி நெஞ்சுவலி காரணமாக கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

  தொடர்ந்து அவருக்கு நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு, கவலைக்கிடமான நிலைக்கு ஆளானார். பின்னர், தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில், உடல் நலம் தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு, நலமாக இருந்தார்.

  இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மீண்டும் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இன்று காலை த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஞானதேசிகன் உடல் நலம் குறித்து குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.
  Published by:Yuvaraj V
  First published: