'போராடுபவர்களை இப்படிச் சொல்வதா?’ - பிரபல பள்ளியின் வினாத்தாளைப் பகிர்ந்த கர்நாடக இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா..

டி எம் கிருஷ்ணா

விவசாய திருத்தச் சட்டங்கள் இன்னும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ’இது வன்முறையாளர்கள் வெளியில் இருந்து வந்த தூண்டுதலால் செய்யப்பட்ட வேலை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என கவலை தெரிவித்துள்ளார் டி.எம் கிருஷ்ணா

 • Share this:
  விவசாயத் திருத்தச் சட்டங்களை எதிர்த்து போராடுபவர்களை வன்முறையில் ஈடுபட்டவர்களாக குறிப்பிட்டு கேள்வியெழுப்பியுள்ள தனியார் பள்ளி வினாத்தாளைப் பகிர்ந்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ள பிரபல கர்நாடக இசைப்பாடகர் , ”இது சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் பள்ளியின் வினாத்தாள் மாதிரி. போராட்ட சம்பவமும், விவசாய திருத்தச் சட்டங்களும் இன்னும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ’இது வன்முறையாளர்கள் வெளியில் இருந்து வந்த தூண்டுதலால் செய்த வேலை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என கவலை தெரிவித்துள்ளார்.

  டி.எம் கிருஷ்ணா வெளியிட்டுள்ள வினாத்தாளில், ”விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய வன்முறை அனைவரின் மனதிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தித்தாள ஆசிரியருக்கு நீங்கள் இதைக் குறித்து கடிதம் எழுதவேண்டும்” என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

  https://youtu.be/eMR6G4L986E

  முன்னதாக, சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி குறித்து கருத்து தெரிவித்திருந்த கர்நாடக சங்கீத பாடகர் டி.எம்.கிருஷ்ணா, “சமூக ஊடக டூல் கிட்டை ஷேர் செய்ததற்காக 21 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரை கைது செய்து விட்டோம் என்பது நாம் போலீஸ் ஸ்டேட்டாக சரிந்து விட்டோம் என்பதா. எனக்கு ஒன்றும் புரியவில்லை. கைது மூலம் நாட்டின் இளைய சமுதாயத்தையே அச்சுறுத்தலாம் என்பதே நோக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.
  Published by:Gunavathy
  First published: