• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Actor Vivek: மரக்கன்றுகள் நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய திருவாரூர் வனம் அமைப்பினர்

Actor Vivek: மரக்கன்றுகள் நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய திருவாரூர் வனம் அமைப்பினர்

மரம் நடும் வனம் அமைப்பினர் - திருவாரூர்

மரம் நடும் வனம் அமைப்பினர் - திருவாரூர்

திருவாரூரில் மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வனம் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • Share this:
    பிரபல திரைப்பட நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான நடிகர் விவேக் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் மட்டுமல்லாது அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான தன்னார்வ அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிலையில் திருவாரூரில் செயல்பட்டுவரும் இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாக்கும் அமைப்பான வனம் தன்னார்வ அமைப்பு சார்பில் மறைந்த திரைப்பட நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

    மேலும் படிக்க... தென்காசியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி...

    விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய திருவாரூர் வனம் அமைப்பினர்


    அந்த நிகழ்ச்சியில் திருவாரூர் பைபாஸ் ரவுண்டானா சாலையோரத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் வனம் அமைப்பின் சார்பில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர்.

    செய்தியாளர்: செந்தில் குமரன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: