டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.40,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு!

டாஸ்மாக்

திருவாரூர் அரசு டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

  • Share this:
திருவாரூர் அரசு டாஸ்மாக் மதுபான கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தல் அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் இரும்புக் கம்பிகளால் டாஸ்மாக் கடை கதவின் பூட்டை உடைத்து மதுபான பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர்.

இன்று காலை டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபான பாட்டில்கள் திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் வந்த நன்னிலம் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நள்ளிரவு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், இரண்டு நாட்கள் முன்னதாக கொள்ளையர்களை மடக்கி பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Esakki Raja
First published: