திருவாரூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவன் மீது
திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்கிறார். இவருக்கும் பாபநாசம் அருகே உள்ள கோவிந்த குடியைச் சேர்ந்த பிரியதர்ஷினி (வயது 26) என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையின் இருவீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கேசவமூர்த்தி தினமும் குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு குடித்துவிட்டு வந்த கேசவமூர்த்தி, மனைவியிடம் வழக்கம்போல் சண்டையிட்டார். இதில் மனமுடைந்த பிரியதர்ஷினி கணவர் மற்றும் குழந்தைகள் தூங்கியவுடன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சென்ற திருவாரூர் நகர காவல்நிலைய போலீசார் பிரியதர்ஷினியின் உடலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதுகுறித்து உயிரிழந்த பிரியதர்ஷினியின் சித்தி கவிதா கூறுகையில். “தொடர்ந்து எங்கள் வீட்டுப் பெண்ணை கேசவமூர்த்தி குடித்துவிட்டு மதுபோதையில் தினமும் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அவர் தூக்கு மாட்டி கொண்டது குறித்து கூட எங்களுக்கு சொல்லவில்லை அந்த ஊர் மக்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரிந்தது.
Also Read: முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மர்மமான முறையில் இறப்பு - உடலைக் கைப்பற்றி போலீஸ் விசாரணை
நாங்கள் நேரடியாக சென்று மருத்துவமனையில் பார்த்த பொழுது அவர் உடலில் காயங்கள் இருந்தது. ஆகையால் பிரியதர்ஷினி உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Also Read: மாயமான சிறுவன் பீரோவில் சடலமாக மீட்பு : கொடூர தம்பதியின் பகீர் வாக்குமூலம்
மேலும், திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆகியுள்ளதால் திருவாரூர் வருவாய் கோட்டாச்சியர் பாலச்சந்திரன் இன்று விசாரணை நடத்துகிறார். இதனிடையே பிரியதர்ஷினியின் அண்ணன் பிரவீன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருவாரூர் நகர காவல்துறையினர் முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.