Home /News /tamil-nadu /

திருட்டு பட்டம் கட்டிய உறவினர்கள்.. எலிபேஸ்ட் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

திருட்டு பட்டம் கட்டிய உறவினர்கள்.. எலிபேஸ்ட் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

தற்கொலை செய்துக்கொண்ட இளம்பெண்

தற்கொலை செய்துக்கொண்ட இளம்பெண்

கிராம மக்கள் முன்னிலையில் தன்னை தகாத வார்த்தையால் திட்டி அசிங்கப்படுத்தி  விட்டதால் அவமானம் தாங்க முடியாமல் சாதனா மணக்கால் அய்யம்பேட்டை என்ற பகுதிக்குச் சென்று எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.

நன்னிலம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண் மீது செய்யாத செயலுக்கு திருட்டு பட்டம் கட்டியதை தாங்க முடியாமல் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கள்ளடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள் சாதனா வயது 20. 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தனியார் நிதி நிறுவனத்தில் (குழு) தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் பணி நிமித்தமாக கடந்த 2ஆம் தேதி சாதனா தீபமங்கலம் என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள உறவினர் இளையபாரதி கிரிஜா தம்பதியின் 2 வயது குழந்தையை தூக்கி கொஞ்சி விளையாடி விட்டு வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார். பின்னர் அந்தக் குழந்தையின் கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க செயின் காணவில்லை என குழந்தையின் பெற்றோர், சாதனா தான் நகையை எடுத்து இருக்க வேண்டுமென கிராம மக்கள் முன்பாக அவரை சோதனை செய்துள்ளனர். இதனால் சாதனா அழுதுகொண்டு நான் நகையை எடுக்கவில்லை என கைகூப்பி மன்றாடினார் என கூறப்படுகிறது.

Also Read: சிறுமியை குடிபோதையில் கொடூரமாக தாக்கிய தந்தை - அரைமணிநேரத்தில் ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்

மேலும் சாதனாவின் தந்தை செந்தில்குமாருக்கும் தொலைபேசி மூலம் உங்கள் மகள் நகையைத் திருடி விட்டதாக கோவத்துடன் பேசியுள்ளனர். இந்நிலையில் கிராம மக்கள் முன்னிலையில் தன்னை தகாத வார்த்தையால் திட்டி அசிங்கப்படுத்தி  விட்டதால் அவமானம் தாங்க முடியாமல் அந்த இளம்பெண் சாதனா மணக்கால் அய்யம்பேட்டை என்ற பகுதிக்குச் சென்று எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார். மாலை 5 மணி வரை தனது  மகள் சாதனாவை காணவில்லை. அதனை அடுத்து தந்தை சாதனாவுக்கு தொலைபேசி மூலம் பேசியதில் நான் மணக்கால் அயம்பேட்டையில் தான் உள்ளேன் என கூறியதனை அடுத்து சாதனாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் தந்தை செந்தில் குமார்.

Also Read: வீட்டில் அரைநிர்வாண கோலத்தில் பெண் சடலம்.. மாயமான கணவன் - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் சாதனா வாந்தி எடுத்ததை அடுத்து பதறிப்போன பெற்றோர்கள் சாதனாவிடம் கேட்டபொழுது தான் எலி பேஸ்ட் உண்டு விட்டதாக பெற்றோர்களிடம் கூறி உள்ளார். உடனடியாக பெற்றோர்கள் அருகே உள்ள நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து உள்ளனர். மேலும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்

இந்நிலையில் ஒருவார கால சிகிச்சையில் இருந்த சாதனா சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது பின்னர் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னர் சாதனாவின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

Also Read: பழனியில் கேரள பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. புகார் வாங்க மறுத்த போலீஸ் - டாக்டர் ராமதாஸ் கண்டனம்

இதுகுறித்து சாதனாவின் தந்தை செந்தில்குமார் குடவாசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் சாதனாவின் உறவினர்களான இளையபாரதி 28, ஐயப்பன் 30 ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செய்யாத தவறுக்கு திருட்டுப் பட்டம் கட்டப்பட்டதால் மனமுடைந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Gold, Tiruvarur

அடுத்த செய்தி