உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து வருவதால், அங்கே மிகுந்த பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மாணவர்கள் அங்கே கல்வி பயின்று வருகின்றனர். உக்ரைனின் சுமி பகுதியில் சிக்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த அபிராமி என்கிற மாணவி உக்ரைன் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த நிலையில், இன்று சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரத்திற்கு வந்து சேர்ந்தார். இந்த நிலையில் மாணவியின் வீட்டிற்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரடியாகச் சென்று மாணவிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அங்கு பயின்று வரும் மாணவ-மாணவிகளின் தற்போதைய நிலை குறித்தும் மாணவியிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், உக்ரைன் நாட்டில் தவித்து வரும் மாணவ மாணவிகளை மீட்டு வந்துள்ள மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், மேலும் அங்கு உள்ள அனைத்து மாணவர்களையும் மீட்டு கொண்டு வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மாணவி அபிராமி - முன்னள் அமைச்சர் காமராஜ்
அதுமட்டு மின்றி டெல்டா மாவட்டங்களில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால், நெல் கொள்முதல் நிலையங்களை மூடாமல் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் கூறினார்.
Must Read : கண்களைக் கட்டிக் கொண்டு மகளிர் தினத்தில் சாதனை : அசத்திய அரசுப் பள்ளி மாணவி!
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாணவி அபிராமி, உக்ரைன் நாட்டில் போர் தொடங்கிய நாளில் இருந்து ஒரு வார காலம் உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வந்தோம். ஒரு சிறிய நிலவறைக்குள் ஏராளமான மாணவ மாணவிகள் அடைபட்டுக் கிடந்தோம். குறிப்பாக சுமி பகுதியில் சிக்கியுள்ள மாணவர்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பத்திரமாக மீட்டு கொண்டுவர வேண்டுமென மாணவி தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.