திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து.. பொதுமக்கள் அவதி
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து.. பொதுமக்கள் அவதி
திருத்துறைப்பூண்டி சாலையில் பாலம் கட்டும் பணி
Bridge construction on Thiruthuraipoondi | போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசுப் பேருந்து உள்ளிட்ட தனியார் சரக்கு வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இரு புறத்திலும் நின்றன.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் புலிவலம் அரசு மேல் நிலைப்பள்ளி எதிரில் நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்த போக்குவரத்து நெரிசல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்ததால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த திருத்துறைப்பூண்டி சாலை என்பது மிக முக்கிய சாலையாக இருக்கிறது. இதில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களும் பல்லாயிரக்கணக்கான பயணிகளும் இந்த வழியாக பயணித்து வருகின்றனர்.குறிப்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முக்கிய வழிபாட்டு தலமான பெருமாள் கோவில் உள்ளிட்டவைகள் இருக்கின்றன.காலை நேரத்தில் பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர்கள் அதிகமாக பயணிக்கக் கூடிய ஒரு சாலையாக இது இருப்பதால் தினமும் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது என்பது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது.
குறிப்பாக அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் முதற்கொண்டு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். வேறு மாற்றுப்பாதை ஏதுமில்லை.இந்த நிலையில் இங்கு போக்குவரத்தை சரிப்படுத்த காவலர்கள் உள்ளிட்ட யாரும் இங்கே நியமிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவர்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசுப் பேருந்து உள்ளிட்ட தனியார் சரக்கு வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அணிவகுத்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இரு புறத்திலும் நின்றன.
இந்த போக்குவரத்து நெரிசல் அவசர மருத்துவ தேவைக்காக செல்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.எனவே மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுத்து பாலம் கட்டி முடிக்கும் வரை இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .விரைந்து பாலம் கட்டும் பணியை முடிக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.