Home /News /tamil-nadu /

டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை முயற்சி...வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்

டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை முயற்சி...வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்

டி.ஆர்.பாலு வீடு

டி.ஆர்.பாலு வீடு

டி.ஆர்.பாலுவின் வீட்டின் அருகே உள்ள வீட்டின் கதவின் பூட்டை உடைத்து முதலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் டி.ஆர்.பாலுவின் வீட்டிற்குள் பூட்டை உடைத்து நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் மன்னார்குடி வீட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை  ஆராய்ந்து இது  தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு. இவர் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

    இதேபோல இவரது மகன் டி.ஆர்.பி ராஜா 2021 சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதேபோல் திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராகவும் இருந்து வருகிறார். டிஆர் பாலுவின் வீடு தளிகோட்டை  கிராமத்தில் அமைந்துள்ளது.

    தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வீட்டில் இல்லாததால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதேபோல அவரது வீட்டின் அருகாமையில் உள்ள ஒரு வீடும் பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனை நீண்ட நேரமாக நோட்டமிட்டுள்ள கொள்ளையர்கள் டி.ஆர்.பாலுவின் வீட்டின் அருகே உள்ள வீட்டின் கதவின் பூட்டை உடைத்து முதலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின்னர் டி.ஆர்.பாலுவின் வீட்டிற்குள் பூட்டை உடைத்து நுழைந்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: நடிகை விஜயலட்சுமி தற்கொலை விவகாரம் : சிறையில் உள்ள ஹரி நாடார் மீண்டும் கைது


    இந்தக் கொள்ளை சம்பவங்கள் குறித்து புகார் வரப்பெற்ற பின் காவல் துறையினர் ஏராளமானோர் டி.ஆர்.பாலுவின் வீட்டிற்கு வந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதனைக் கொண்டும் கொள்ளையர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    டி.ஆர். பாலு வீட்டின் அருகில் உள்ள வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட  விசாரணையில் டி.ஆர். பாலு வீட்டில் பொருட்களோ, பணமோ, நகை என எதுவும் இல்லை என தெரியவந்துள்ளதாகவும், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மன்னார்குடி காவல் ஆய்வாளர் தலைமையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்: செந்தில்குமரன் - திருவாரூர்

    மேலும் படிக்க: ஆக்கிரமிப்பு என்றால் ஏழைகளின் குடிசைகள், கூரை வீடுகள் மட்டுமே அரசுக்கு நினைவுக்கு வருமா? சீமான் கேள்வி

    Published by:Murugesh M
    First published:

    Tags: T.r.balu, Theft, Tiruvarur

    அடுத்த செய்தி