ஊரடங்கு தடையை மீறி செயல்பட்ட கடைகள்: சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை!

கடைகளுக்கு சீல் வைப்பு

தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி  மன்னார்குடி கடைவீதியில் சில கடைகள் திறக்கப்பட்டு  செயல்பட்டு வந்தன.  குறிப்பாக சலூன் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், திறந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்

  • Share this:
மன்னார்குடியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட சலூன் கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் என பத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் தொற்று தற்போது குறைந்துள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ஆம் தேதி வரை  அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தொற்று அதிகம் உள்ள, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு,  திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நாளை முதல்  குறைந்த அளவு தளர்வுகளோடு  ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் கூடுதலாக தளர்வுகள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பழக்கடைகள் மளிகைக் கடைகள் இறைச்சிக் கடைகள் செயல்படும் எனவும் மேலும் பெரிய வணிக நிறுவனங்கள் எதுவும் செயல்படாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மருந்தகம், பால் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சிலவற்றை தவிர அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க.. அடிக்கடி செல்போனில்பேச்சு: காதல் மனைவியை கொன்ற2வது கணவர்..

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முழு ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினரும் நகராட்சி அதிகாரிகளும்  தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது,  தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி  மன்னார்குடி கடைவீதியில் சில கடைகள் திறக்கப்பட்டு  செயல்பட்டு வந்தன.  குறிப்பாக சலூன் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், திறந்திருப்பது கண்டறியப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து மன்னார்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை செய்ததில் சுமார் 10 கடைகளை திறந்திருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.   ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து விற்பனை செய்ததால் கடையின் உரிமையாளர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் அபராதமாக வசூலித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் அரசின் உத்தரவை மீறி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டால்அபராதம் விதிக்கப்படுவதோடு கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மன்னார்குடி நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

செய்தியாளர்: செந்தில்குமரன், திருவாரூர்


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: