• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: முன்னாள் அமைச்சர் கோரிக்கை

மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: முன்னாள் அமைச்சர் கோரிக்கை

கொரோனா தடுப்பு தீவிரம்

கொரோனா தடுப்பு தீவிரம்

தமிழக அரசு பொதுமக்களுக்கு கொரானா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களை வீட்டில் தனிமையில் இருந்து கொள்ளுங்கள் என மருத்துவர்கள் கூறுவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது

  • Share this:
    வேளாண் பணிகளுக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படுவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு காய்கறி, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு மாவட்ட அதிமுக சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    திருவாரூர் நகராட்சியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை முன்னாள் அமைச்சர் காமராஜ்  வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ கொரானா இரண்டாவது அலை தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருகிறது கொரானா தொற்றை தடுக்கும் வகையில் அதிக கொரானா பரிசோதனைகள் செய்ய வேண்டும். அப்படி எடுத்தால் தான் தொற்றை குறைப்பதற்கு வழி வகுக்கும் எனவே தொற்று இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனைகள் அதிக அளவில் எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

    அதேபோன்று தமிழக அரசு பொதுமக்களுக்கு கொரானா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களை வீட்டில் தனிமையில் இருந்து கொள்ளுங்கள் என மருத்துவர்கள் கூறுவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே கொரோனா கேர் சென்டர்களை அதிகப்படுத்தி அவர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து தொற்று இல்லை என முடிவு வரும்வரை சிகிச்சை அளித்து அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்துக்கொண்டார்

    டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபடுவதற்கு மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும்  தற்போது மேட்டூர் அணையில் 97 அடி தண்ணீர் உள்ளதால்  நமக்கு கர்நாடகாவிலிருந்து தர வேண்டிய தண்ணீரை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும்  என்று  வலியுறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: