ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருத்தணி தொழிலதிபர் - மனைவி கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!

திருத்தணி தொழிலதிபர் - மனைவி கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!

கொலையுண்ட தம்பதி

கொலையுண்ட தம்பதி

கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று கழுத்தை இறுக்கி கொலை செய்து சடலங்களை வனப்பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திருத்தணியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி கழுத்தை நெரித்து ஆந்திராவில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிமுக ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவரின் மகன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

  திருத்தணியை சேர்ந்தவர் சஞ்சீவி ரெட்டி, (68 வயது) இவரது மனைவி மாலா. தொழிலதிபரான சஞ்சீவி ரெட்டி தனது மனைவியுடன் கடந்த 29ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தொழிலதிபர் தம்பதியை தேடிவந்தனர். இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள அப்பள குண்டா காட்டுப் பகுதியில் ஆணும் பெண்ணும் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக ஆர்சி புரம் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

  இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த தம்பதியர் திருத்தணியை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவி ரெட்டி மற்றும் அவரது மனைவி மாலா என தெரியவந்தது. உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. இவர்களை கடத்திக் கொண்டு வந்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  Also Read:  அட்ரஸ் கேட்பது போல் வந்து, மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

  இதனிடையே திருத்தணி காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநில போலீசார் விசாரணை நடத்தி இக்கொலை குறித்து புலனாய்வு செய்ததில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய குழுவின் முன்னாள் துணைத்தலைவர் தாண்டவராயன் என்பவரின் இளைய மகன் ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ராபர்ட் என்கின்ற மற்றொரு ரஞ்சித்குமார், விமல்ராஜ் ஆகியோர் பணம் மற்றும் நகைக்காக தொழிலதிபர் தம்பதியினரை காரில் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அழைத்துச் சென்று கழுத்தை இறுக்கி கொலை செய்து சடலத்தை வனப்பகுதியில் வீசிச் சென்றது கண்டறியப்பட்டது.

  Also Read:  யப்பா என்னா அடி..! போலீஸ் முன்னிலையில் டேக்ஸி ஓட்டுநரை தாக்கிய இளம் பெண்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

  அதிமுக பிரமுகர் தாண்டவராயன் மகன் ரஞ்சித் குமார், தொழிலதிபர் சஞ்சீவி ரெட்டிக்கு உறவினர் ஆவார். சஞ்சீவி ரெட்டியின் தங்கை மகன் தான் ரஞ்சித் என கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கைதானவர்கள்

  இந்தநிலையில் அந்த மூவரையும் கைது செய்த போலீசார் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் கொலைக்கு பயன்படுத்திய 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர் பணம் நகைக்காக தொழிலதிபர் ஆந்திராவிற்கு தம்பதியினர் கடத்திச் செல்லப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  ஆர்.எல்.பார்த்தசாரதி, செய்தியாளர் - திருவள்ளூர்

  Published by:Arun
  First published:

  Tags: Andhra Pradesh, Crime News, Murder, Thiruvallur, Tiruttani Constituency