கொட்டும் மழையில் போக்குவரத்தை சரி செய்த பெண் காவலர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

சுமதி

கையில் குடை கூட இன்றி கொட்டும் மழையில் நனைந்தபடி போக்குவரத்து காலவர் சுமதி இரவு நேரத்தில் போக்குவரத்தை சரிசெய்யும் வீடியோ வெளியான நிலையில், பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  திருவாரூர் மாவட்டத்தில் கொட்டும் மழையில் போக்குவரத்தை சரிசெய்த பெண் போக்குவரத்து காவலர் சுமதிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ருக்மணிபாளையம் பகுதியில் மதுக்கூர் - தஞ்சாவூர் - திருவாரூர் சந்திப்பு சாலை உள்ளது. இங்கு நேற்று இரவு எட்டு மணி அளவில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து,  பணியில் இருந்த சுமதி என்ற போக்குவரத்து பெண் காவலர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

  இதையும் படிங்க: பயோமெட்ரிக்கால் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்


  அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடை கூட இன்றி கொட்டும் மழையில் நனைந்தபடி போக்குவரத்து காலவர் சுமதி இரவு நேரத்தில் போக்குவரத்தை சரிசெய்தார். பெண் காவலர் போக்குவரத்தை சரிசெய்யும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பணியின் மீதான பெண் காவலர் சுமதியின் அர்ப்பணிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: