Home /News /tamil-nadu /

Pongal 2022: ஆதரவற்ற பள்ளி மாணவிகள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட்டம்

Pongal 2022: ஆதரவற்ற பள்ளி மாணவிகள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட்டம்

சமத்துவ பொங்கல்

சமத்துவ பொங்கல்

திருவாரூரில் உள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் தங்கி பயிலும் ஆதரவற்ற மாணவிகள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    திருவாரூரில் ஆதரவற்ற பள்ளி மாணவிகள் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். 

    உலகெங்கும் உள்ள தமிழர்களின் பண்டிகையான பொங்கல் தைத்திருநாள் பண்டிகை இன்று தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் பொங்கல் பானை வைத்து சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் படைத்து பொதுமக்கள், விவசாயிகள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் உள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் தங்கி பயிலும் ஆதரவற்ற மாணவிகள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அந்தப் பள்ளியில் அமைந்துள்ள சிறுவர் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ள 30-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற, பெற்றோர்களை இழந்த மாணவிகள் சர்க்கரை பொங்கல் வைத்து இந்த ஆண்டு எந்தவித நோய் நொடியும் இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு பாதுகாப்பான ஆண்டாக அமைய வேண்டுமெனவும் சூரியக் கடவுளை வேண்டிக் கொண்டனர்.

    பொங்கல் விழாவின்போது அன்னை மேரி மாதா சிலைகள் வைக்கப்பட்டு பொங்கல் வைத்து பொங்கல் விழாவினை சமத்துவ பொங்கல் விழாவாக பள்ளி மாணவிகளும் பள்ளி நிர்வாகத்தினரும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செந்தில்குமரன்  ( திருவாரூர்  )
    Published by:Arun
    First published:

    Tags: Pongal, Thiruvarur

    அடுத்த செய்தி