Home /News /tamil-nadu /

நகராட்சி அலுவலகத்தில் பாலியல் தொல்லை: துப்புரவு பணியாளர் தற்கொலைக்கு முயற்சி

நகராட்சி அலுவலகத்தில் பாலியல் தொல்லை: துப்புரவு பணியாளர் தற்கொலைக்கு முயற்சி

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இன்று பணிக்கு வந்த தமிழ்செல்வியிடம் முத்துச்செல்வன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதனால், மனமுடைந்த தமிழ்செல்வி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    திருவாரூரில் பாலியல் தொல்லையால் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர் விஷமருந்தி தற்கொலை முயற்சித்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட அழகிரி காலனியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி(30). தமிழ்ச்செல்விக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி கடந்த 5 ஆண்டுகளாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் சரம் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

    தமிழ்செல்வி போன்று திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்ச்செல்விக்கு சரம் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் முத்துச்செல்வன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று பணிக்கு வந்த தமிழ்ச்செல்வி மடப்புரம் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து அருகில் இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தமிழ்ச்செல்வி விஷம் அருந்தி இருப்பதாக  தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: புதுக்கோட்டையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - வழக்குப்பதிவில் காவல்துறையும் சேர்ப்பு


    இது தொடர்பாக தமிழ்செல்வியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தமிழ்செல்வி, ’நான் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தற்போது என்னுடைய ஒப்பந்த நிறுவனமான சரம் நிறுவனத்தின் மேலாளர் முத்துச்செல்வன் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    நான் பலமுறை எனது உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளேன். அவர்கள் முத்துச்செல்வனை அழைத்து கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று நான் பணியில் இருந்த பொழுது என்னை அலுவலகத்திற்கு வரவழைத்து தகாத முறையில் என்னிடம் நடந்து கொண்டார். அதனால் நான் மனம் உடைந்து அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றேன்’ என்று தமிழ்ச்செல்வி கூறினார்.

    மேலும் படிக்க: தங்க நகை பட்டறையில் நள்ளிரவில் கொள்ளையர்கள் கைவரிசை.. சேலத்தில் பரபரப்பு



    மேலும் தமிழ்ச்செல்வி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Sexual harassment, Sexual harrasment, Thiruvarur

    அடுத்த செய்தி