நண்பர்கள் தினத்தன்று சோகம்:3 நண்பர்கள் தற்கொலை முயற்சி-ஒருவர் உயிரிழப்பு!

தற்கொலை முயற்சி

தந்தை திட்டியதால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஆனந்த் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு, மூன்றுபேருமே தற்கொலை செய்துகொள்ளலாம் என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். பின்னர் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்துள்ளனர்.

  • Share this:
நண்பர்கள் தினமான இன்று திருவாரூர் மாவட்டத்தில் மூன்று நண்பர்கள் விஷமருந்து தற்கொலைக்கு முயற்சித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26). இவரது தந்தை பெயர் கார்த்திகேயன். தந்தை கார்த்திகேயன்  விவசாயம் செய்து வருகிறார். ஆனந்த், அசோக்குமார் (வயது 26), ஆசைத்தம்பி (வயது 28) ஆகிய மூன்று பேரும் இணைபிரியாத நண்பர்கள்.

மூன்று பேருக்கும்  திருமணம் ஆகவில்லை.  இவர்கள் நிரந்தரமாக எந்த வேலைக்கும் செல்லாமல்சிறு சிறு கூலி வேலைகளை மட்டும் செய்து கொண்டு ஊர் சுற்றி வந்துள்ளனர். இரவில் தினந்தோறும் மது அருந்தியும் வந்துள்ளனர். இதனை பெற்றோர்கள் பலமுறை கண்டித்தும் மூன்று பேரும் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் ஆனந்தை அழைத்த அவரது தந்தை கார்த்திகேயன், வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றுவது தொடர்பாக கண்டித்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த ஆனந்த் தனது நண்பர்களான ஆசைத்தம்பி மற்றும் அசோக்குமார் ஆகியோரோடு மது அருந்தும்போது தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி இரும்பு கம்பிகள் விலையேற்றம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!


இதனை கேட்ட  நண்பர்கள் அசோக்குமார் மற்றும் ஆசைத்தம்பி ஆகிய இருவரும் நீ மட்டும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என்று சொல்லி மூன்று பேரும் மது வாங்கி வந்து அதில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளனர்.   இதனால் அவர்கள் மயக்கமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மூவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த்  உயிரிழந்தார்.  அசோக்குமார் மற்றும் ஆசைத்தம்பி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  நண்பர்கள் தினத்தன்று நண்பர்கள் மூவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அதில் ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: காரில் ‘வருமான வரித்துறை’ பெயர் பலகையுடன் கஞ்சா கடத்தல் பெண் உட்பட இருவர் கைது!

Published by:Murugesh M
First published: