• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர்

ஆட்சியர் சாந்தாவுக்கு காய்ச்சல் மற்றும் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  கணிசமாக குறைந்து வருகிறது.

    எனினும், திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தொற்று பரவலை தடுக்க அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தா அறிவுறுத்தி வருகிறார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் சாந்தா உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஆட்சியர் சாந்தாவுக்கு காய்ச்சல் மற்றும் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா என்பதற்காக பரிசோதனை செய்திருக்கிறார். இதில் 5% நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதனை அடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் மாவட்ட ஆட்சியர் சாந்தா ஈடுபட்ட பொழுது அவருடன் சக ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஆகையால் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    செய்தியாளர் - செந்தில்குமரன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: