Home /News /tamil-nadu /

திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான காதலன்.. மாணவியின் விபரீத முடிவு..

திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான காதலன்.. மாணவியின் விபரீத முடிவு..

சாவித்

சாவித்

Thiruvarur District : மாணவி தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாணவியின் தரப்பில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தலைமறைவான சாவித்தை தேடி வருகின்றனர். 

மேலும் படிக்கவும் ...
    திருவாரூரில் 3 மாதம் கர்ப்பமான நிலையில் காதலித்து திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதாக கூறி கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் 24 வயதான சாவித். இவர் அங்குள்ள ரைஸ் மில்லில் வேலை பார்க்கிறார். இவர் தனது ஊருக்கு அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த நாகை தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவியுடன் பள்ளிப் பருவத்திலேயே பழக்கம் ஏற்பட்டதில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

    இந்த நிலையில் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சாவித் பழகி வந்துள்ளார். மேலும் சாவித் மாணவியை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி கர்ப்பமாகி இருக்கிறார். இதனை அறிந்த மாணவி சாவித்தை தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனையடுத்து கல்லூரி விடுமுறையில் வீட்டிலிருந்த மாணவி மன விரக்தி அடைந்து எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இரண்டு நாள் வரை எலி பேஸ்ட் எதுவும் செய்யாததால் வீட்டில் இது குறித்து சொல்லாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் இரண்டு நாள் கழித்து ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததையடுத்து  உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ALSO READ |  வங்க கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
     அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய வயிற்றில் இருந்த மூன்று மாத கரு கலைந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாணவியின் தரப்பில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தலைமறைவான சாவித்தை தேடி வருகின்றனர்.


    (மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050)


    செய்தியாளர் : செந்தில்குமரன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Suicide, Thiruvarur

    அடுத்த செய்தி