Home /News /tamil-nadu /

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர்த்திருவிழா! இன்று கொடியேற்றத்தை தொடர்ந்து தேதி அறிவிப்பு...

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர்த்திருவிழா! இன்று கொடியேற்றத்தை தொடர்ந்து தேதி அறிவிப்பு...

 திருவாரூர் தேர்  பங்குனி  திருவிழா

திருவாரூர் தேர் பங்குனி திருவிழா

96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்டது இந்த தேர் எனவும்  முற்றிலுமாக அலங்கரிக்கப்படும்போது இது 400 டன் எடையை அதாவது 4 லட்சம் கிலோ எடையைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது

    திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில், பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் இன்று நடைப்பெற்று முடிந்தது. அதனையொட்டி உலகப்புகழ் பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் தேதி அறிவிப்பும் வெளியாகியது. இதற்காக கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பிலிருந்தே தேரின் கட்டுமான பணிகள் மும்மரமாக நடைப்பெற்று வருகின்றது.

    உலகின் பிரசித்திப்பெற்ற கோவில்களில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலும் ஒன்று. உலகளவில் திருவாரூர் தேருக்கென தனி சிறப்பும் புகழும் உண்டு. லட்சக்கணக்கான மக்கள்கடல் மத்தியில் உருண்டு வரும் பெரிய தேர் என்பதால் ஆழித்தேர் எனவும் அழைக்கப்படுகிறது.

    திருவாரூர் பங்குனி திருவிழா கொடியேற்றம்


    96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்டது இந்த தேர் எனவும்  முற்றிலுமாக அலங்கரிக்கப்படும்போது இது 400 டன் எடையை அதாவது 4 லட்சம் கிலோ எடையைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.ஆழித் தேரின் நான்கு இரும்புச் சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகு காண்போரை அதிசயிக்க வைக்கும்.

    தேரின் கட்டுமானத்திற்கு பயன்டுத்தப்படும் மரங்கள், துணி, அலங்கார பொருட்கள்,குதிரைகள் என அனைத்தும் பிரம்மாண்ட வகையில் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்படும். தேரோட்டத்தின் பொழுது தேரை இயக்கவும் கட்டுப்படுத்தவும் புல்டோசர், ஜேசிபி பயன்படுத்தப்படும். மேலும் வடக்கயிறின் எடையே 15 டன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.



    இந்நிலையில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின்போது இறுதி நிகழ்ச்சியாக இத்தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு 15.3.22-ல் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் கோவில் நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகின்றன.

    "ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், "தேராரூம் நெடுவீதி திருவாரூர்" என சேக்கிழாரும் பாடிய சிறப்பு மிக்க இந்த தேர் திருவிழா அனைத்து மத மக்களும் கொண்டாடும் திருவிழாவாக இருக்கிறது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Thiruvarur

    அடுத்த செய்தி