Home /News /tamil-nadu /

திருவாரூர் ஆழித் தேரோட்டத்தில் கவனம் ஈர்த்த சூர்யா ரசிகர்களின் செயல்

தேர் உலா வரும் வீதிகளில், திருவாரூரை சேர்ந்த சூர்யா ரசிகர் வெள்ளை நிற பனியன்கள் மற்றும் தொப்பிகள் அணிந்து வலம் வந்தனர்.

உலகப் பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் இன்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்நிலையில், தேர் உலா வரும் வீதிகளில், திருவாரூரை சேர்ந்த சூர்யா ரசிகர் வெள்ளை நிற பனியன்கள் மற்றும் தொப்பிகள் அணிந்து வலம் வந்தனர். அவர்களது கைகளில், "அமைதியை விட வலிமையான ஆயுதம் ஏதும் இல்லை" என்ற வாசகம் அடங்கிய அட்டைகள் இருந்தன.

Also Read : தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்: விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

"புதுப்படத்துக்கான புரமோஷனா..?!" என்று பொதுமக்கள் அனைவரும் அவர்களை குழப்பத்துடன் பார்க்க, "உக்ரைன் போரை நிறுத்தக் கோரி, உலக மக்களின் கவனத்தை இந்த நூதன கவன ஈர்ப்பு" என்கின்றனர் சூர்யா ரசிகர்கள்.
Published by:Vijay R
First published:

Tags: Suriya, Thiruvarur

அடுத்த செய்தி