கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் மீண்டும் பணி கேட்டு போராட்டம்
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் மீண்டும் பணி கேட்டு போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்
Thiruvarur District கொரோனா நோய்த்தொற்று காலத்தில் குடும்பத்தையும் கவனிக்காமல், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கருணை அடிப்படையில் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொரோனா காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மருத்துவ துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் தற்காலிக பணியில் சேர்ந்த செவிலியர்களின் பணிநீக்க ஆணையை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கிட கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த போது மருத்துவத் துறையில் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு தற்காலிக செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்பனர்களை பணிக்கு அமர்த்தியது.
இந்த நிலையில் மார்ச் 31 அன்று பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று நோய்த் தொற்றில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு இணங்க ஏனைய மாவட்டங்களில் பணி வழங்கியது போல் திருவாரூர் மாவட்டத்திலும் உடனடியாக பணி வழங்கி , பணி பாதுகாப்பு செய்ய வேண்டும் என்றும், பணியாற்றிய காலங்களில் வழங்க வேண்டிய 3 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் குடும்பத்தையும் கவனிக்காமல், உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கருணை அடிப்படையில் மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர் : செந்தில்குமரன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.