தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை - திருவாரூர் எஸ்பி எச்சரிக்கை

திருவாரூர் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Share this:
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருடுபோன மற்றும் காணாமல் போன ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான 101 உயர் ரக செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் காணாமல் போனது மற்றும் திருடு போனது தொடர்பாக 2020 மற்றும் 2021 ஆண்டில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில் காவல் நிலையங்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில் ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 101 உயர் ரக செல்போன்களை கடந்த ஒரு மாத காலத்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களிடம் அவர்களது செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஒப்படைத்தார். மேலும் இதுவரை ஒரு மாதத்தில் நூற்றி 101 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள புகார் மனுக்கள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.. பொதுமக்கள் தங்களது செல்போன்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் செல்போன்களை திருடி பல்வேறு குற்ற செயல்களுக்கு பயன்படுத்துவதாகவும் இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் எனவும் அறிவுரைகளை கூறினார்.

Also read: விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் - அண்ணாமலை பேச்சு

செல்போன்களை பெற்றுக் கொண்ட உரிமையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தங்களது நன்றிகளை தெரிவித்தனர். மேலும் விரைந்து செயல்பட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மீதமுள்ள புகார் மனுக்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறியதாவது, கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கோயில் விழாக்கள் திருவிழாக்களுக்கு தமிழ்நாடு அரசு பொதுமக்கள் ஒன்று கூட கூடாது என தடை விதித்துள்ளது.

அதன்படி விநாயகர் சதுர்த்தி விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி திருவாரூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வது, விநாயகர் ஊர்வலங்கள் நடத்துவது அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானதாகும். தடையை மீறி விநாயகர் ஊர்வலங்கள் நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published: