பப்ஜி விளையாட்டில் முன்விரோதம் - நண்பனை நம்பி சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

பப்ஜி விளையாட்டால் நேர்ந்த கொலை

பப்ஜி விளையாடுவதில் முன்விரோதம் சமாதானம் பேச அழைத்து நண்பனை குத்திக்கொன்ற கொடூரம்.

  • Share this:
பப்ஜி விளையாட்டில் முன்விரோத காரணமாக இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்கள்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் நாகூர்பிச்சை இவரது மகன் இஸ்மத்(வயது 22)இவர் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே ஆள்நடமாட்டமில்லாத பகுதியல் இஸ்மத் காயத்துடன் சாலையோரத்தில் பிணமாக கிடந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி டி.எஸ்.பி இளஞ்செழியன் மற்றும் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் இஸ்மத்தின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரனை செய்தனர்.

Also Read: எஸ்.பி.வேலுமணி வீட்டில் விறுவிறு ரெய்டு.. நெருக்கமானவருக்கு நெஞ்சுவலி

விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், மன்னார்குடியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்த இஸ்மத் கடந்த ஒரு வருடம் முன்பு படிப்பு முடிந்து முத்துபேட்டைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த இவரது நண்பர் வாஜித்துக்கும் இஸ்மத்திற்கும் பப்ஜி விளையாடுவதில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மன்னார்குடிக்கு சென்று சமாதானம் பேசலாம் என வாஜித், இஸ்மத்தை அழைத்துள்ளார்.

Also Read:  பெண்களுடன் உல்லாசம், மசாஜ்... சென்னையில் பிரபல கிளப் மீது பகீர் புகார்

இதனையடுத்து மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே உள்ள நடமாட்டமில்லாத பகுதிக்கு இஸ்மத், வாஜித் மற்றும் வாஜித் நண்பர்களான நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த தீன்ஹனீஸ், மர்ரூஜ் ,அக்பர்பாஷா ஆகியோரும் வந்துள்ளனர்.இதில் இஸ்மத் மற்றும் வாஜித்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றிய நிலையில் வாஜித் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து இஸ்மத்தை  கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக முதல்கட்ட விசாரனையில் தெரிய வந்தததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் இதில் யார் யாருக்கு தொடர் உள்ளது. கொலைக்கு வேறு ஏதெனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.மேலும் தப்பி சென்ற நாச்சிகுளத்தை சேர்ந்த வாஜித், தீன்ஹனீஸ், மர்ரூஜ் ,அக்பர்பாஷா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.கொலை சம்பவம் குறித்து அறிந்ததும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரனை செய்தார்.மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து உத்திரவிடடுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: