• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Karunanidhi Birthday : கருணாநிதி பிறந்தநாள்... ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் பூண்டி கலைவாணன்

Karunanidhi Birthday : கருணாநிதி பிறந்தநாள்... ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் பூண்டி கலைவாணன்

பூண்டி கலைவாணன்

பூண்டி கலைவாணன்

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்.

  • Share this:
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி முத்துவேலர் அஞ்சுகம் அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அவரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் அவர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் திமுக நிர்வாகியின் உணவகத்தில் இன்று ஒரு நாள் முழுவதும் பொது மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியை திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து உணவு பொட்டலங்களை பெற்றுச் சென்றனர்.

இதேபோன்று திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் முடி வெட்டும் தொழிலாளர்கள் ஆயிரம் நபர்களுக்கு அரிசி மளிகைப் பொருட்கள் காய்கறி அடங்கிய தொகுப்பினை சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பிரகாஷ் ஒன்றிய செயலாளர் தேவா இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினி சின்னா கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Must Read : வாழ்த்துகள் ஸ்டாலின் என்று சொல்வீர்களா தலைவரே! கருணாநிதி பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் உருக்கம்

அதனைத் தொடர்ந்து கொடிக்கால்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். அனைவருக்கும் தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதே போன்று மாவட்டம் முழுவதும் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: