ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருத்துறைப்பூண்டியில் ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

திருத்துறைப்பூண்டியில் ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

 1 கோடி மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பறிமுதல்

1 கோடி மதிப்பிலான 150 கிலோ கஞ்சா பறிமுதல்

Thiruvarur District: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக தஞ்சாவூருக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தன் பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

ஆந்திராவிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான 150 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்த நிலையில், கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் சரக காவல் துறை தலைவர் ஏ.கயல்விழி உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தும் கும்பலை கடந்த சில மாதங்களாக கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக தஞ்சாவூருக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, தஞ்சாவூர் சரக டிஐஜியின் தடைப்படை போலீஸார் காவல் உதவி ஆய்வாளர் எப்.அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என்.கந்தசாமி, எஸ்.கண்ணன், தலைமை காவலர் கே.இளையராஜா, காவலர்கள் கே.சுந்தர்ராமன், டி.ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரவுண்டானா பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேற்று காலை திருவாரூர் மாவட்டம் திருத்துறைத்துறைப்பூண்டி ரவுண்டானா அருகே வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். இதில் காரில் 150 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் கனவாய்பட்டியைச் சேர்ந்த சு.மகேஸ்வரன்(26) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் கஞ்சா விற்பனையை தடுக்க டிஐஜி உத்தரவின்படி சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் டெல்டா மாவட்டங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவிலிருந்து காரில் 150 கிலோ கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் கணபதி உதவியோடு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டோம். ஆந்திராவிலிருந்து முதலில் திருத்துறைப்பூண்டிக்கு வந்து அதன்பின்னர் தஞ்சாவூருக்கு வரும் காரை மடக்கிய சோதனையிட்டபோது அதில் 150 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

Also read... சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

இந்த காரை ஓட்டி வந்த நபர் தன்னுடைய காரில் மூன்று போலி நம்பர் பிளேட்டுகளை வைத்திருந்தார். ஆந்திராவில் வாகனத்தை ஓட்டி வரும்போது, ஆந்திர மாநில பதிவெண் கொண்ட ஒரு நம்பர் பிளேட்டும், தமிழக எல்லையில் பிரபல வாடகை கார் நிறுவனத்தின் பதிவெண்ணும், அதன்பின்னர் ஒரு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, கார் ஆகியவற்றையும், கைது செய்யப்பட்ட மகேஸ்வரனையும் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம் என்றனர்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Cannabis, Crime News, Tanjore, Thiruvarur