மது கடத்தல் வழக்கில் கைதான பெண் கைதி மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்
மது கடத்தல் வழக்கில் கைதான பெண் கைதி மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் மீது வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தல் மற்றும் கள்ளச் சாராயம் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய பெண் கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் மீது வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்தல் மற்றும் கள்ளச் சாராயம் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பூந்தோட்டம் பகுதியில் சாராயம் விற்றதாக கூறி கஸ்தூரியை பேரளம் காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவாரூர் மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி கஸ்தூரிக்கு சிறையில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக அங்கு பணியில் இருந்த காவலர்கள் உதவியுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரக் காலமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை பெற்று வரும் கஸ்தூரிக்கு இரண்டு பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பெற்று வந்த கைதி கஸ்தூரி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு பெண் காவலர்கள் உயர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை அடுத்து தப்பியோடிய பெண் கைதியை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோடிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-செய்தியாளர்: செந்தில்குமரன்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.