“கேஸ் சிலிண்டருக்கு சவ ஊர்வலம்“ திருவாரூரில் காங்கிரஸ் நூதன போராட்டம்
“கேஸ் சிலிண்டருக்கு சவ ஊர்வலம்“ திருவாரூரில் காங்கிரஸ் நூதன போராட்டம்
காங்கிரஸ் கட்சி நூதனப் போராட்டம்
Thiruvarur News : போராட்டத்தின் நிறைவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும்,மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சமையல் கியாஸ் சிலிண்டருக்கு சவ ஊர்வலம் நடத்தி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் நகர காங்கிரஸ்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாவட்ட ஒபிசி பிரிவு சார்பில் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சமையல் காஸ் சிலிண்டர்களை அமரர் ஊர்தியில் வைத்து மேளதாளத்துடன் இறுதி மரியாதை செலுத்தி சவ ஊர்வலம் நடத்தும் போராட்டம் நடைபெற்றது .இந்த ஊர்வலம் திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் தொடங்கி திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் முடிவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் அமரர் ஊர்தியில் சமையல் காஸ் சிலிண்டர்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து, ஊதுபத்தி கொளுத்தி வைத்து சவ ஊர்வலம் நடப்பது போன்று ஊர்த்திக்கு முன்பு மேள தாளத்துடன் பட்டாசு வெடித்தபடி ஊர்வலமாக காங்கிரஸ் கட்சியினர் எடுத்து வந்தனர்.
இந்த சமையல் காஸ் சிலிண்டர் சவ ஊர்வல போராட்டத்தின் நிறைவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும்,மத்திய அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.