Home /News /tamil-nadu /

World Book Day 2021 | மன்னார்குடியில் வண்ண கோலமிட்டு திருக்குறளை வாசித்து கொண்டாடிய மக்கள்

World Book Day 2021 | மன்னார்குடியில் வண்ண கோலமிட்டு திருக்குறளை வாசித்து கொண்டாடிய மக்கள்

திருக்குறள் வாசிக்கும் மாணவர்களும் கிராம மக்களும்

திருக்குறள் வாசிக்கும் மாணவர்களும் கிராம மக்களும்

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு மன்னார்குடியில் 25000 வீடுகளில் 75000 கும் மேற்பட்டோர் வாசலில் வண்ணக் கோலமிட்டு திருக்குறளை வாசித்து புத்தக தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

    உலக புகழ்பெற்ற கவிஞரான ஷேக்ஸபியரின் பிறந்த தினம் உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அறிவொளி வாசிப்பு இயக்கம் சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. மன்னார்குடி 12வது தெரு பகுதியில் பொதுமக்கள் தங்களின் வீட்டு வாசலில் புத்தக தினத்தை வரவேற்று வண்ணக் கோலங்களை வரைந்திருந்தனர். மாணவர்கள் வாசலில் நின்று திருக்குறளை வாசித்தனர்.

    இதேபோல் மன்னார்குடி மந்தகார தெரு பகுதியில் உள்ள நூலகத்தில் மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிறுவர் சிறுமிகள் ஒன்றாகக்கூடி திருக்குறளை வாசித்து உலக புத்தக தினத்தை கொண்டாடினர்.

    புத்தகம் வாசிக்கும் மக்கள்


    கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிகள் சரியாக நடைபெறாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் செல்போன், கணினி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு மன்னார்குடி பகுதியில் உள்ள 25000 வீடுகளில் சுமார் 75000கும் மேற்பட்டோர் காலை 7 மணி முதல்  திருக்குறளை வாசித்தனர்.

    மேலும் படிக்க... பட்டியலின மக்களுக்கு சேவை செய்ய மறுக்கும் சலூன்கள் - கிராம மக்களின் வீடுகளுக்கே சென்று முடிவெட்டும் சகோதரர்கள்

    நாள்தோறும் பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

    செய்தியாளர்: செந்தில்குமரன், திருவாரூர்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Book Fair, Thiruvarur

    அடுத்த செய்தி