Home /News /tamil-nadu /

ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை - திருவாரூரில் பரபரப்பு

ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை - திருவாரூரில் பரபரப்பு

ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை - திருவாரூரில் பரபரப்பு!

ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை - திருவாரூரில் பரபரப்பு!

முருகானந்தத்தின் உடலை கைப்பற்றிய குடவாசல் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    திருவாரூரில் கடன் பிரச்சினையால் ஊராட்சி மன்ற தலைவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்துள்ள நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (45). இவருக்கு இந்திரா என்கிற மனைவியும் ஐஸ்வர்யா, பேபி ஷாலினி என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நெடுஞ்சேரி ஊராட்சியில் அதிமுக சார்பில் முருகானந்தம் போட்டியிட்டு  நெடுஞ்சேரி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் முருகானந்தம் தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல நபர்களிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை நெடுஞ்சேரி பகுதியின் ஆற்றங்கரை ஓரத்தில் முருகானந்தம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் முருகானந்தத்தின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக, அவரை மீட்ட உறவினர்கள் குடவாசல் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றுள்ளனர். அங்கு முருகானந்தத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் மேலும் பூச்சிமருந்து குடித்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

    Also read: 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய 18 வயது வாலிபர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..

    இதையடுத்து, குடவாசல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முருகானந்தம் பல லட்ச ரூபாய் கடன் பிரச்சனையில் இருந்ததாகவும் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால், பணத்தை திருப்பி கொடுக்க முடியாத காரணத்தினால் விரக்தியில் இருந்த முருகானந்தம், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

    பின்னர் முருகானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    முருகானந்தம் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு எதேனும் காரணம்  உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Suicide, Thiruvarur

    அடுத்த செய்தி