திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள எந்த வருடம் கட்டப்பட்டது என்பதை அறிய முடியாத அளவிற்கு அமைந்துள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ பெரியாண்டவர் ஸ்ரீ பெரியநாயகி ஸ்ரீ நொண்டி வீரன் ஆலயங்கள் மிகவும் பாழடைந்து கிடந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு இதனை அப்பகுதி வாசிகள் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தி உள்ளனர்.
அதன் பிறகு தற்போது இந்த ஆலயத்தின் மதில் சுவர்கள், விக்கிரகங்கள்,கோபுரம் ஆகியவற்றை புதிதாக அமைத்து செப்பனிட்டு குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த மார்ச் 18 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கிய நிகழ்வு நான்காம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்து,மகா பூர்ணாஹதி நடைபெற்று கடங்கள் புறப்பாடு நடைபெற்ற பின்பு விமான மகா குடமுழுக்கு,மூலவர் மகா குடமுழுக்கு ஆகியவை நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் சிவ விஷ்ணு இணைந்த ரூபமாயும்,பூமியிலே எங்கும் இல்லாத வகையில் அமையப்பெற்ற மூர்த்தியாய் ஸ்ரீ பெரியாண்டவர் ஸ்ரீ பெரியநாயகி நொண்டி வீரன் மற்றும் கிராம பரிவார தெய்வங்கள் அமைந்துள்ளது.
மேலும் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திற்கு தென்மேற்கே வடபுறத்தில் உள்ள ஸ்ரீ குரு தக்ஷிணாமூர்த்தி ஆலயத்திற்கு வடமேற்கே சந்திரன் பூஜித்த ஸ்தலமான சோமநாதர் ஆலயத்துக்கு முன்பு இந்த கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த குடமுழுக்கு விழாவில் மடப்புரம் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து குடமுழுக்கை கண்டுகளித்தனர்.குடமுழுக்கை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் , செந்தில்குமரன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.