டாஸ்மாக்கில் கள்ள நோட்டு கொடுத்து மது வாங்கிய நபர்.. மோசடி கும்பலை பிடித்த போலீஸ்
டாஸ்மாக்கில் கள்ள நோட்டு கொடுத்து மது வாங்கிய நபர்.. மோசடி கும்பலை பிடித்த போலீஸ்
டாஸ்மாக்கில் சாராயம் வாங்க கள்ள நோட்டு
Crime News | டாஸ்மாக் கடையில் அருள் என்பவர் 500 ரூபாய் கொடுத்து மதுபாட்டில் வாங்கியுள்ளார். அவர் கொடுத்த பணம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் திருவாரூர் நகர காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
திருவாரூர் நகர பகுதிகளில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அருள் என்பவர் 500 ரூபாய் கொடுத்து மதுபாட்டில் வாங்கியுள்ளார். அவர் கொடுத்த பணம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் திருவாரூர் நகர காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அருளை பிடித்து விசாரித்ததில் அவர் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயற்சித்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து அருளிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அருளிடம் நடைபெற்ற தொடர் விசாரணையில் புலிவலம் வெள்ளைச்சாமி மகன் தமிழ்வாணன் வயது 38, நாகப்பட்டினம் புதுச்சேரி மருதுவின் மகன் ராஜா என்கிற கரிகாலன் வயது 34, நாகப்பட்டினம் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் ஈஸ்வரன் வயது 20, நாகப்பட்டினம் மேல வெண்மணி விஸ்வநாதன் மகன் விஸ்வபாரதி வயது 34 ஆகியோர் இந்த கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதில் தொடர்புடையவர்கள் என்பதை காவல்துறையினர் கண்டறிந்து அவர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலும் காவல் துறையினர் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து கைதாகியுள்ள 5 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி 500 ரூபாய் 100 ரூபாய் 200 ரூபாய் நோட்டுகளை நகலெடுத்து பொது மக்களிடம் புழக்கத்தில் விட்டு பணத்தை ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. திருவாரூர் நகர பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட இந்த கும்பலால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் : செந்தில்குமரன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.