திருவாரூர் : காவல் நிலையத்திற்கு முன்பு வாலிபர் தற்கொலை முயற்சி
திருவாரூர் : காவல் நிலையத்திற்கு முன்பு வாலிபர் தற்கொலை முயற்சி
வாலிபர் தற்கொலை முயற்சி
Thiruvarur District : சுதாகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது மைத்துனரான அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவரை கேரள காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரளம் காவல் நிலையத்திற்கு முன்பு தனது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தீ குளித்து வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மானந்தாங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் 36 வயதான சுதாகர். தனக்கு ஏற்பட்ட இருதய பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவதற்காக தனது மனைவி சுதாவின் அண்ணனான பிரசாந்த் என்பவரிடம் 1 லட்சம் கடன் வாங்கிய பிரச்சினையில் 90 ஆயிரம் பணத்தை சுதாகர் திருப்பிக் கொடுத்த நிலையில் மீதமுள்ள 10 ஆயிரம் பணத்தை கொடுக்க வேண்டும் என பிரசாந்த் தகராறில் ஈடுபட்டு தனது கணவரை தாக்கியதாக சுதா பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சுதாகர் நேற்று பேரளம் காவல் நிலையம் முன்பு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 80 சதவீதம் உடலில் தீக்காயம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சுதாகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது மைத்துனரான அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவரை கேரள காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : செந்தில்குமரன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.