திருவாரூர் மாவட்டத்தில் தங்கை முறை உள்ள சிறுமி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் 17 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமிக்கு தூரத்து சொந்தமான மோகன் ராஜ் என்பவர் அடிக்கடி சிறுமி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அவர் சிறுமிக்கு அண்ணன் முறை வேண்டும் என்பதால் சிறுமி வீட்டில் உள்ள யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் மோகன்ராஜ் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
வீடியோ எடுத்ததுடன் அல்லாமல் அதை சிறுமியிடம் காட்டி அவரை மிரட்டி வந்துள்ளார். மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று கூறி சிறுமியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. மோகன்ராஜ் சிறுமியை மிரட்டியது மட்டுமல்லாமல் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் சிறுமியை வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் மோகன்ராஜின் தந்தை, தாய் மற்றும் தம்பி ஆகியோர் சிறுமியை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சிறுமியை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மோகன்ராஜின் தந்தை தாய் மற்றும் அவரது தம்பி ஆகியோர் சிறுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மயங்கி விழுந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மோகன்ராஜின் தந்தை தனிக்கொடி,தாய் சாந்தி,தம்பி பாக்கியராஜ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நால்வரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : செந்தில்குமரன்
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.