ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொங்குநாடு கோரிக்கை 20 ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை: அர்ஜுன் சம்பத்

கொங்குநாடு கோரிக்கை 20 ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை: அர்ஜுன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

கொங்கு நாடு கோரிக்கை 20 ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை. வளர்ச்சி முன்னேற்றம் அடிப்படையாகக் கொண்ட கோரிக்கை தமிழகத்தை மூன்றாக பிரித்து, மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தேர்தல் வெற்றிக்கான திமுகவின் ஏமாற்று வேலை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

  திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பின்னர்  செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆடி மாதத்தில் அனைத்து கோவில்களையும் இந்து சமய அறநிலைத்துறை திறக்க வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆடி மாத கூழ் வழங்க அனைத்து கோவில்களுக்கும் தானியங்களை வழங்க இந்துசமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் அன்னதான திட்டத்தை கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்படுத்தியதை போன்று செய்ய வேண்டும். காமராஜர் பிறந்தநாள் விழா அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் முறையாக நடைபெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

  Also read: மதுரையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்து வந்த கும்பல் கைது!

  இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். கொங்கு நாடு கோரிக்கை 20 ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை. வளர்ச்சி முன்னேற்றம் அடிப்படையாகக் கொண்ட கோரிக்கை தமிழகத்தை மூன்றாக பிரித்து, மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும். சிறிய மாநிலமாக இருந்தால் நிர்வாகம் செய்ய வசதியாக இருக்கும்.

  மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் முதல்வர் செயல்பட வேண்டும். அனைத்து மக்களையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும் என தெரிவித்த அவர், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் 60 ரூபாய்க்கு கிடைக்கும் என்றார்.

  மேலும், ஜிஎஸ்டி வரம்புக்குள் வராததற்கு காரணம் திமுகவும் காங்கிரசும் தான் எனக் கூறிய அவர், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கோவில் சொத்துக்களை ஆவணப்படுத்தும் செயல் சிறப்பானது என்று தெரிவித்தார்.

  செய்தியாளர்  - பார்த்தசாரதி

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Arjun Sampath, Kongu Nadu