Home /News /tamil-nadu /

திருவாரூரில் தொடரும் கனமழை: நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவாரூரில் தொடரும் கனமழை: நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திருவாரூர் மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. நேற்று இரவு மட்டும் மிக கனமழை திருவாரூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல் மழை விட்டிருந்த போதிலும் மதியம் முதல் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாகவும், நாளையும் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Heavy rain, School Leave

அடுத்த செய்தி