• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தோள் மீது கைப் போட்டு உறவாடும் முன்னாள் அமைச்சர் காமராஜ், திவாகரன்- அ.தி.மு.கவில் சலசலப்பு

தோள் மீது கைப் போட்டு உறவாடும் முன்னாள் அமைச்சர் காமராஜ், திவாகரன்- அ.தி.மு.கவில் சலசலப்பு

திவாகரன், காமராஜ்

திவாகரன், காமராஜ்

திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜூம், சசிகலாவின் சகோதரர் திவாரனும் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு பேசியது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சொத்துகுவிப்பு வழக்கில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா சிறையிலடைக்கப்பட்டார். அப்போது முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.கவினர் சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியை விட்டு விலக்கினர்.

    சசிகலாவை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கும் வகையில் கட்சியில் மாற்றம் கொண்டுவந்து ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துவருகின்றனர். அ.தி.மு.கவினரும் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் தொடர்பு கொள்வதில்லை. இந்த ஆண்டு சசிகலா சிறையிலிருந்து வெளிவந்துள்ள நிலையில் அ.தி.மு.க மீது உரிமை கோருவார் என்று எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

    இந்த காலத்தில் சசிகலாவுடன் தொடர்பில் இருந்தவர்களை அ.தி.மு.க தலைமை கட்சியிலிருந்து நீக்கிவருகிறது. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி இறந்த நிலையில் சசிகலாவும் டி.டி.வி.தினகரன் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். இருப்பினும், சசிகலா, டி.டி.வி.தினகரன் கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டவர்களாகவே இருந்துவருகின்றனர்.

    இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம் சேரன்குளம் கிராமத்தில் உள்ள ஆள்காட்டி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் சசிகலா சகோதரர் திவாகரன் மற்றும் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திவாகரன், காமராஜ்


    இந்நிலையில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். இந்தநிகழ்வு அ.தி.மு.கவினர் மத்தியில் பேசிக்கொண்டது தற்போதைய அரசியல் சூழலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னதாக சசிகலா சிறைக்குச் சென்றிருந்த தொடக்க காலத்தில் டி.டி.வி.தினகரன் மோதல் ஏற்பட்டது. அதனையடுத்து, அம்மா அணி என்ற பெயரில் தனித்து செயல்பட்டுவந்தார் திவாகரன். பின்னர், அம்மா அணியை அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சியாக அறிவித்தார். அதற்கு கொடியையும் அறிமுகம் செய்தார். பின்னர், எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக ஆதரவும் தெரிவித்துவந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: