Home /News /tamil-nadu /

நாகதோஷம் கழிக்க கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி திடீர் மரணம்.. சாமியாரிடம் கிடுக்கிபிடி விசாரணை

நாகதோஷம் கழிக்க கோவிலுக்கு சென்ற கல்லூரி மாணவி திடீர் மரணம்.. சாமியாரிடம் கிடுக்கிபிடி விசாரணை

உயிரிழந்த கல்லூரி மாணவி

உயிரிழந்த கல்லூரி மாணவி

Thiruvallur College Student Death: நாகாத்தம்மன் ஓடை கோயிலில் பூசாரி முனுசாமி நாகதோஷத்திற்கு பரிகார பூஜை செய்ய வந்த கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டாரா?

    திருவள்ளூர் அருகே நாக தோஷம் கழிக்க சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்தது என்ன கோவில் பூசாரியிடம் இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை.

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமம். இங்கு ஓடை ஓரம் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவிலில் வைத்து முனுசாமி என்பவர் அருள்வாக்கு கூறிவருகிறார். இவரிடம் தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிகாம் படித்து வந்துள்ளார். நாகதோஷத்திற்கு பரிகார பூஜை செய்ய நாகாத்தம்மன் கோவிலுக்கு தனது பெரியம்மாவுடன் வந்துள்ளார்.

    இரவு பூஜை முடிந்து நள்ளிரவு, பூசாரி முனுசாமியின் மனைவியுடன் தூங்கச் செல்வதற்கு முன்பு ஹேமமாலினிக்கு தேங்காய் பூசணிக்காய் எலுமிச்சம்பழம் சுற்றி திருஷ்டி கழித்து உள்ளனர். பூசாரி முனுசாமியின் அறையில்  ஹேமாமாலினி மற்றும் அவரது தங்கை படுத்து தூங்கி உள்ளனர். இவர்களுடன் வந்த பெரியம்மா இந்திராணி அங்குள்ள அம்மன் கோவில் மண்டபத்தில்  கோவிலுக்கு வந்திருந்தவர்களுடன் படுத்து  தூங்கிக் கொண்டிருந்தார்.

    Also Read: விபரீதத்தில் முடிந்த இரண்டாம் கல்யாணம்.. இளம்பெண் கொலையா? போலீசார் தீவிர விசாரணை

    இந்நிலையில்  அதிகாலை ஹேமமாலினி  திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து மயங்கி பேச்சு மூச்சின்றி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார்.கோவில் பூசாரி முனுசாமியின் தரப்பில் அவரது மனைவி  மட்டும் எழுந்து வந்து மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஹேமமாலினியின் பெரியம்மா இந்திராணியை எழுப்பி கூறியுள்ளார். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து இரண்டு மணி நேரம் கழித்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த கல்லூரி மாணவி ஹேமாமாலினி சிகிச்சை பலனின்றி   பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து பென்னலூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவான  கோவில் பூசாரி முனுசாமி பிடித்து போலீஸார் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Also Read: ஐ லவ் யூ மாமா.. காதலர் தினத்தில் தற்கொலை செய்துகொண்ட மனைவி

    நாகாத்தம்மன் ஓடை கோயிலில் பூசாரி முனுசாமி நாக தோஷத்திற்கு பரிகார பூஜை செய்ய வந்த கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டாரா. கோவில் வளாகத்தில் வைத்து மாணவி விஷம் அருந்தி உயிரிழக்க காரணம் என்ன. 5 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக உறவினர்களிடம் பேரம் பேசினாரா. மாணவி விஷம் குடித்ததும் இரண்டு மணி நேரம் காலதாமதம் செய்து அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் விட்டுவிட்டு 20 கிலோமீட்டர் தூரமுள்ள வெங்கல் கிராமத்தில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றது ஏன்? என மீண்டும் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

    ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் இரண்டாவது நாளாக விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர் செல்போன் பதிவுகளை வைத்து விசாரணையை வேறு கோணத்தில் பெண்ணலூர் பேட்டை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

    செய்தியாளர்: பார்த்தசாரதி ( திருவள்ளூர்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime News, Death, Murder, Police

    அடுத்த செய்தி