திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் எடுக்கப்படும் எண்ணெய், குழாய்கள் மூலமாக 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களப்பால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து அடியக்கமங்கலம், வெள்ளக்குடி உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
களபால் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் வழியில் மேலபனையூர் கிராமத்தில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விளை நிலத்தில் பரவியது. இந்த விளைநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயி சிவகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.
ஓஎன்ஜிசி குழாய் அடைப்பை சரி செய்யவில்லை என்றால் மீதமுள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் கச்சா எண்ணெய் பரவிவிடும் சூழல் இருப்பதாகவும் விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர். 6 அடிக்கு கீழ் பதிக்க வேண்டிய எண்ணெய் குழாய்களை 3 அடியில் புதைத்துள்ளதே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டினர்.
குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி காவல்துறையினர் மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், கச்சா எண்ணெய் குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட நிலத்தில் தொடர்ந்து சாகுபடி மேற்கொள்ளும் விதமாக வேளாண் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயிக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். குழாய் உடைப்பால் தீ விபத்து ஏற்படுமோ என யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் குளிக்கரை, கமலாபுரம், கோட்டூர், உள்ளிட்ட இடங்களில் 140 எண்ணெய் கிணறுகள் உள்ளன. இவற்றிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயானது அடியக்கமங்கலம், வெள்ளக்குடி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 3 முதல் 30 கிலோமீட்டர் வரையில் பூமிக்கு அடியில் குழாய்கள் மூலமாக அனுப்பப்படுகிறது. முப்பது கிலோமீட்டர் கடந்து காரைக்கால் மாவட்டம் நரிமணம் பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி தலைமை இடத்தில் . மண்ணெண்ணை, டீசல், பெட்ரோல் ஆகியவை பிரித்தெடுக்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் படிக்க... தமிழ்நாட்டிலேயே பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க்...
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்த பின்னரும் குழாய் பதிக்கும் பணிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையே ஓன்ஜிசி எண்ணெய் குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட விவசாயி சிவக்குமாருக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கும்படி ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளார். இனி எண்ணெய் குழாய்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓன்ஜிசி நிறுவனம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ONGC Gas, Thiruvarur