ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குழந்தை திருமணத்தால் விஷம் குடித்த சகோதரிகள் - 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. போக்சோ சட்டம் பாய்ந்தது

குழந்தை திருமணத்தால் விஷம் குடித்த சகோதரிகள் - 11-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. போக்சோ சட்டம் பாய்ந்தது

குழந்தை திருமணம் விவகாரத்தில் கைதான நபர்

குழந்தை திருமணம் விவகாரத்தில் கைதான நபர்

Child Marriage: திருமணத்தின் போது சிறுமியின் அக்கா மாயமானதால் 13வயது சிறுமிக்கு 25 வயது வாலிபருடன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

திருவாரூர் அருகே  குழந்தை திருமணத்தால் தற்கொலை செய்து கொண்ட 11ம்வகுப்பு மாணவி உயிரிழப்பு.

திருவாரூர் அருகேயுள்ள திருக்கரவாசல் சன்னதி தெருவை சேர்ந்த சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரது 17 வயது மகள் நான்கு வருடங்களுக்கு முன்பு தனக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததால் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி  மனமுடைந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் குடித்து விட்டு வைத்திருந்த எஞ்சிய பானத்தை விஷம் என்று அறியாமல் அவரது தங்கையும் குடித்ததால் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

Also Read:  பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு  சிறுமியின் அக்கா அபிராமிக்கும் விழுப்புரம் ஆண்டிகுப்பத்தை சேர்ந்த  25 வயதுடைய சிவக்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அபிராமி மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு பெருத்த அவமானம் ஆகி விட்டதாக கூறி மாப்பிள்ளை வீட்டார் அபிராமியின் தங்கையான 13 வயதேயான சிறுமியை  சிவக்குமாருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனை அடுத்து திருமணம் முடிந்து மூன்றே நாட்களில் சிறுமி தனது சொந்த ஊருக்கே திரும்பி வந்து விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் சிறுமி மற்றும் அவருக்கு துணையாக அவரது சித்தப்பா மகள் இருவரையும் வேதாரண்யத்தில் உள்ள குருகுலம் பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். இந்த நிலையில் அர்ச்சனா வீட்டார் தங்கள் மகளுக்கு வரதட்சணையாக கொடுத்த நகை பணம் போன்றவற்றை திரும்ப கேட்டுள்ளனர். இதற்கு சிவகுமார் தரப்பு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்சனையின் காரணமாக மன உளைச்சலில் இருந்த மாணவி  பள்ளியில் இருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தவர் குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார்.

Also Read: Loan App மோசடி.. அந்தரங்க மிரட்டலுக்கு ஆளாகும் இளைஞர்கள் - கதறும் மக்கள்

அவர் குடித்துவிட்டு மறைத்து வைத்திருந்த எஞ்சிய விஷம் கலந்த குளிர்பானத்தை அவரது தங்கையும் விஷம் என்று தெரியாமல் குடித்து இருக்கிறார். இதை சற்று நேரம் கழித்து கவனித்த  சிறுமி  அதில் விஷம் கலந்திருப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து பெற்றோரிடம் நாம் இருவரும் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து முதல் நாள் மாலை விஷம் குடித்ததை அடுத்தநாள் காலை வரை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவிகள் இருவரும் மயக்கம் அடைந்த பிறகுதான்  அவர்கள் விஷம் அருந்தியது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரும் திருவாரூர்  அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த திருவாரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் இந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த சிறுமியின் சித்தப்பா ஏழுமலை, கணவர் சிவகுமார், சிறுமியின் பெற்றோர், சிவகுமாரின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ  சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Also Read: கணவனை கொன்று குழிதோண்டிப் புதைத்த மனைவி.. 11 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த மர்மம்

இந்த நிலையில் நேற்று முன்தினம்  சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சிவகுமார் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிறுமி உயிரிழந்ததை அடுத்து விழுப்புரம் காவல்துறையினர் சிவக்குமாரை தற்போது கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள ஐந்து பேர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை திருமணம் குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் அங்குமிங்குமாக நடைபெறுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. எனவே இந்த  திருமணம் நடைபெறும்போது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்த மண்டப உரிமையாளர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் போது தான் இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Commit suicide, Crime News, Death, Girl Child, POCSO case, Police