முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவாரூர் பயணம்

Youtube Video

முதலமைச்சர் ஸ்டாலின், இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

 • Share this:
  சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் செல்கிறார். முதல் நிகழ்வாக, காட்டூரில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மாலை 4 மணிக்கு மரியாதை செலுத்துகிறார். அதே பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.

  புதன்கிழமை காலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனி மருத்துவ பிரிவு வளாகத்தை திறந்து வைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு மு.க.ஸ்டாலின் முதன்முறையாக பயணம் மேற்கொள்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  மேலும் படிக்க...இன்றைய ராசிபலன் (ஜூலை 06, 2021)

  முதலமைச்சர் பயணத்தின்போது ட்ரோன் மூலம் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, முதலமைச்சர் திருவாரூரில் இருக்கும் 2 நாட்களும், மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த கூடாதென, ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: