திருவாரூரில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா கோலாகலம்
திருவாரூரில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா கோலாகலம்
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா
Thiruvarur District : திருவாரூர் மேட்டுத் தெருவில் உள்ள ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் அவதரித்த இல்லத்தில் திருச்சி ருக்மணி ஸ்ரீ கிருஷ்ணா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரின் நவாவர்ண கீர்த்தனைகள் இசைக்கப்பட்டது.
திருவாரூரில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் 247வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சத்குரு தியாகப்ரும்மம் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் திருவாரூரில் அவதரித்தவர்கள் என்பதால் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா என்பது திருவாரூரில் வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் 247 வது ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வினை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கர்நாடக சங்கீத சேவா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா குழுவினர் இணைந்து நடத்தினர்.இதனை முன்னிட்டு திருவாரூர் புது தெருவில் உள்ள ஸ்ரீ தியாகப்ரும்மம் அவதரித்த இல்லத்தில் நவாவரண பூஜை மற்றும் விசேஷ பூஜைகளுடன் ஸ்ரீ முத்துசாமி தீட்சிதரின் 247 வது ஜெயந்தி விழா தொடங்கியது.
அதனை தொடர்ந்து திருவாரூர் மேட்டுத் தெருவில் உள்ள ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் அவதரித்த இல்லத்தில் திருச்சி ருக்மணி ஸ்ரீ கிருஷ்ணா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரின் நவாவர்ண கீர்த்தனைகள் இசைக்கப்பட்டது. மேலும் கர்நாடக மும்மூர்த்திகளில் கீர்த்தனைகளும் இசைக்கப்பட்டது.
செய்தியாளர் : செந்தில்குமரன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.