Home /News /tamil-nadu /

திருவாரூரில் 295 கிலோ குட்கா, புகையிலை கடத்தல் - ஒருவர் கைது

திருவாரூரில் 295 கிலோ குட்கா, புகையிலை கடத்தல் - ஒருவர் கைது

 295 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் புகையிலை

295 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் புகையிலை

திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் சட்டவிரோதமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா,பான் மசாலா இவற்றை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தடை செய்யப்பட்ட குட்கா,பான் மசாலா போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அறிவித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா,ஹான்ஸ் புகையிலை விற்பனையை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரடி பார்வையில் திருவாரூர் மாவட்ட தனிப்படையினர் மாவட்ட முழுவதும் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ | தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும்: வானிலை ஆய்வு மையம்


 திருவாரூர் நகர காவல் சரகத்திற்குட்பட்ட விஜயபுரம், பகுதியைச்சேர்ந்த மணிராஜ் த/பெ முனியாண்டி என்பவர் வீட்டில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்ட போது சாக்குமூட்டையில் மறைத்து வைத்திருந்த  ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள 295 கிலோ எடைகொண்ட குட்கா,ஹான்ஸ் புகையிலை மசாலா பறிமுதல் செய்யப்பட்டு மணிராஜ் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர்

மேலும் இதுபோன்று திருவாரூர் மாவட்டத்தில் யாரேனும் சட்டவிரோதமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.சிறப்பாக செயல்பட்ட தனிபடையினரை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.


 

செய்தியாளர் , செந்தில்குமரன்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Thiruvarur

அடுத்த செய்தி